தீபிகா குமாரிக்கு வெள்ளிப்பதக்கம்..!
உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிா் தனிநபா் பிரிவு அரையிறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தீபிகா குமாரி, தென்கொரியாவின் நாம் சுஹ்யோன், கிம் சிஹ்யோன் மற்றும் சீனாவின் லீ ஜியாமன் ஆகிய 4 பேர் தகுதிபெற்றனர்.
இதனையடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தீபிகா குமாரி, தென்கொரியாவின் கிம் சிஹ்யோனிடம் மோதினார். இதில் 0-6 என்ற புள்ளி கணக்கில் தீபிகா குமாரி தோல்வி அடைந்தார். இதனால் இரண்டாம் இடம் பிடித்த தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.