1. Home
  2. தமிழ்நாடு

ஜெயலலிதா சொத்துக்களை தீபா, தீபக் உரிமைக் கோர முடியாது - பரபரப்பு தீர்ப்பு!

1

சொத்துக் குவிப்பு வழக்கில், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விரைவில் ஏலம் விடக்கோரி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதாவின் சொத்துக்களை உடனடியாக ஏலம் விட உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடும் பணி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மூலமாக வேகம் எடுத்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபக், தீபா ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று (ஜூலை 12) பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புக் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சொத்துக்களை வாரிசுகளுக்கு வழங்க இயலாது” என்று வாதிட்டார்.

இதனையேற்ற நீதிபதி மோகன், “சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டச் சொத்துக்களை வாரிசுத்தாரர்கள் உரிமைக் கோர முடியாது” என்று தீர்ப்பளித்த நீதிபதி, தீபா, தீபக் ஆகியோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like