போயஸ் கார்டனுக்குள் விடாத தீபக்... தவித்த ஜெ. தீபா..!!

ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ்கார்டன் இல்லம் வாரிசுரிமை அடிப்படையில், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் பிள்ளைகளான ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபிக்குக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் ஜெ. தீபா தான் ஒட்டுமொத்த போயஸ் கார்டன் வீட்டையும் பராமரித்து வருகிறார்.
நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெ. தீபா கொடியேற்றி வைக்க போயஸ் கார்டன் சென்றிருந்தார். அவருடன் கணவர் மாதவனும் உடன் வந்திருந்தார். கொடியேற்றப் போகும் போது அங்கு ஜெ. தீபக் வந்துவிட்டார். அப்போது அவர் தீபா கொடியேற்றக் கூடாது என்று கூறி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக ஜெ. தீபா அதரவாளர்கள் கத்த துவங்கியதும் அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. ஜெ. தீபா உற்சாகமாக கொடியேற்றுவிட்டு, போயஸ் கார்டன் வீட்டுக்குள் இருக்கும் கோயிலுக்கு சாமி குடும்பிடச் சென்றார். அப்போது அர்ச்சகர் உரிய மரியாதை தரவில்லை என்று மீண்டும் ஒரு சண்டை உருவானது. அதையும் ஜெ. தீபா ஆதரவாளர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ. தீபா, போயஸ்கார்டன் இல்லம் எனக்கும், என் தம்பிக்கும் சேர்த்து வாரிசு அடிப்படையில் வழங்கப்பட்டது. தேசியக் கொடியேற்ற வந்த என்னிடம் தீபக் தகராறு செய்தார். இந்த இல்லத்துக்குள் வரக்கூடாது என்று கூறினார். அதற்கு அவருக்கு உரிமை கிடையாது என்றார்.
கொடநாடு விஷயத்தில் டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா என அவர்களுடைய குடும்பமே கைக்கோர்த்து செயல்பட்டது. அவர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் இணைந்துள்ளது சரியல்ல. கடந்த 1989-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. அவர் எவ்வளவோ நல்லது செய்து உள்ளார். அதுகுறித்து பேசுவதுதான் அவரைப் போன்ற தலைவர்களுக்கு சரியாக இருக்கும்.