தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி..!
வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வழுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்ககடல் பகுதியில் நாளை தமிழ்நாடு- இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழையும், நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது கூறப்பட்டுள்ளது. இதை தவிர தமிழகத்தில் 12-ந் தேதி திருச்சி, பெரம்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில் 20 மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல டிசம்பர் 13-ல் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் எனவும் டிசம்பர் 14, 15-ல் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.