1. Home
  2. தமிழ்நாடு

இந்த 2 அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு..?

1

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் வரத்து அதிகமாக இருந்து வந்தது. கோடை காலம் என்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கனமழையின் காரணமாக அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அடித்து செல்லப்பட்டவர்களை பொதுமக்கள் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதில் நெல்லையை சேர்ந்த 17 வயசு சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து குற்றால அருவிகளில் மறுஅறிவிப்பு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பழைய குற்றால அருவி, பிரதான அருவி, ஐந்தருவியில் ஐந்தருவி மட்டும் தற்போது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நீர் வரத்து கண்காணிப்பு, உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பிரதான அருவி, பழைய அருவி ஆகிய இரு அருவிகளையும் வனத்துறையினர் வசம் ஒப்படைக்க மாவட்டம் நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுப் பணித் துறை , மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரு அருவிகளும் அடுத்த இரு தினங்களுக்குள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

வனத்துறையிடம் ஒப்படைத்தால் வன காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like