டிச.3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு பகுதியில் கேட்ட வரம் வரும் புனித சவேரியார் பேராலயம் உள்ளது. தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் ஒன்று.இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய ஆலயமான சவேரியார் ஆலய விழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.இந்த பேராலய விழாவுக்கு உள்நாடு, உள்ளூர், வெளிநாடு என்று பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை டிசம்பர் 3ம் தேதி சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் (டிச.03) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார்.