கடன் தொல்லை.. சிறுநீரகத்தை விற்க முயன்ற தம்பதி..ரூ.17 லட்சத்தை இழந்ததே மிச்சம்..

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காமேஸ்வர் மற்றும் பார்கவி என்ற தம்பதியர்கள் வசித்து வருகின்றனர். சொந்தமாக மருந்துக்கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் மருந்துக்கடையில் ஏற்பட்ட நஷ்டத்ததால், சிறுநீரகத்தை விற்க முயன்றனர்.
இந்நிலையில் சிறுநீரகம் விற்க புதுதில்லியில் உள்ள சக்ரா மருத்துவமனை ஒன்றைக் கண்டுள்ளனர். இதில், சோப்ரா சிங் என்ற இடைத்தரகருடன் இணையத்தில் பேரத்தில் ஈடுபட்டனர். இதில், இறுதியாக ஒரு சிறுநீரகத்திற்கு ரூ. 2 கோடி தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
மேலும், ரூ. 2 கோடி பணத்தை அறுவை சிகிச்சைக்கு பின் வாங்கி தருவதாகவும், தற்போது நீங்கள் ரூ. 17 லட்சம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார் இடைத்தரகர். இதையடுத்து, தம்பதியினர் மேலும் கடன் வாங்கி கொடுத்துள்ளார்கள்.
ஒப்பந்தத்தை முடிக்க மேலும் ரூ. 5 லட்சம் கேட்டதை அடுத்து காமேஸ்வரன் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.