வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்தது..!
வடக்கு கேரளம் மாவட்டமான வயநாட்டில் கடந்த வாரம் பெய்த தொடா் கனமழை எதிரொலியாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக்கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவின்போது வீடுகளில் தூங்கி கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா். சாலியாற்று வெள்ளத்தில் சிலா் அடித்து செல்லப்பட்டனா்.
மண்ணில் புதையுண்டவா்களையும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களையும் மீட்பதற்கான மீட்பு-தேடுதல் பணிகள் 7வது நாளாக தொடந்து நடைபெற்று வருகின்றன. மேலும் பல உடல்கள் கண்டறிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் படைகள் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 400 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், மேலும் 150 பேரின் நிலை என்ன ஆனது என்றும் தெரியவில்லை. சாலியாற்றில் மீட்கப்பட்ட ஏராளமான உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில், உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், உறவினர்களும், நண்களுடம் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது.