பட்டாசு குடோன் வெடி விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!
ஓசூர் அருகே நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை மற்றும் கிடங்கில் கடந்த அக்டோபர் 07- ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அதில் குடோனில் வேலை செய்து வந்தவர்கள் 16 பேர் உயிரிழந்தனர். அதில், 15 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், படுகாயங்களுடன் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில், வாணியம்பாடியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், சிகிச்சைப் பெற்று வந்தார்.
அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (அக்.19) உயிரிழந்ததை அடுத்து, அத்திப்பள்ளி பட்டாசுக் குடோன் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.