1. Home
  2. தமிழ்நாடு

நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132ஆக உயர்வு..!

1

பூமிக்கடியில் இருக்கும் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 2015ம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதில் சுமார் 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல 21 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தொடர்ந்து அவ்வப்போது லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் நேபாளத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். 

இன்று காலை 5 மணி நிலவரப்படி சுமார் 70 பேர் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தின் மேற்கு பகுதியில் 36 பேரும், ஜாஜர்கோட் பகுதியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்து உள்ளது. இந்நிலநடுக்கம், டெல்லி-என்.சி.ஆர்., உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வடஇந்திய பகுதிகளிலும் உணரப்பட்டது.குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like