1. Home
  2. தமிழ்நாடு

சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் !! டி.ஜி.பி - க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..

சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் !! டி.ஜி.பி - க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் !! டி.ஜி.பி - க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் , சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் , சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை , மகன் உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணத்தில் அப்பட்டமான  மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்று எம்.பி.கனிமொழி கடிதத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் , தந்தை மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் டிஜிபியை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி, கோவில்பட்டி சிறைத்துறை ஐ.ஜி ஆகியோரும் விளக்கமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like