சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் !!  சத்தியமா விடவே கூடாது !! கொந்தளித்த நடிகர் ரஜினி...

 | 

சாத்தான்குளம் தந்தை - மகன் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழக அரசியல் களத்தையும் தாண்டி டெல்லி வரை இந்த சம்பவம் எதிரொலித்து இருக்கிறது.

அரசியல் பிரபலங்கள் தவிர , திரையுலகத்தினர் , விளையாட்டு வீரர்களும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். ஹைகோர்ட்டும் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய யாரையும் விடக்கூடாது.

அனைவருக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார். இது குறித்து டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்து உள்ளதாவது ; தந்தையையும் , மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும் ,

காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது, சத்தியமா விடவே கூடாது என்று கூறி உள்ளார்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP