சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் !! வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே !! கமலஹாசன் டிவிட்

சாத்தான் குளத்தில் ஜெயராஜ் , மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பாக மநீம தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார். அதில் ,
சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே!
— Kamal Haasan (@ikamalhaasan) June 29, 2020
குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.
(1/2)