பிரபல காமெடி நடிகர் ராஜகோபாலன் மரணம்...

பிரபல கன்னட காமெடி நடிகர் ராஜகோபால் ( 69 ) உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் தொடர்ந்து மரணத்தைத் தழுவி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர் மரணமடைந்த மறுநாளே, பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணமடைந்தார். இது பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் சில சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சோகம் மறைவதற்குள் பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அடுத்து மலையாள நடிகர் சச்சி திடீரென மரணமடைந்தார். இந்நிலையில், பிரபல கன்னட காமெடி நடிகர் ராஜகோபால் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
மிமிக்ரி ராஜகோபால் என்று அழைக்கப்படும் இவர், கன்னடம், தமிழ் உட்பட சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல சூப்பர் ஹிட் கன்னட படங்களில் நடித்தவர். பெங்களூரில் வசித்து வந்த இவர், சிறுநீரகம் மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இவரது உடல்நிலை கடந்த புதன்கிழமை இரவு திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
அதற்குள் அவர் உயிர் பிரிந்தது. மறைந்த ராஜகோபாலுக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதையடுத்து கன்னட சினிமா துறையினர் அவர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Newstm.in