மரணம்.. கமல்ஹாசன் உருக்கமான பேச்சு..!
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
'தக் லைப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் 'ஜிங்குச்சா' பாடல் யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.
'தக் லைப்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24-ந் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் இசை வெளியிட்டு விழா நடைபெறும் என்றும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லைவ் பர்பாமென்ஸ் செய்வார் எனவும் படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கொச்சியில் நடந்த பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் "நான் ஏற்கனவே ஒருமுறை கூறியுள்ளேன். நடிப்பில் இருந்து என்றும் ஓய்வு பெற மாட்டேன் அப்படி நான் ஓய்வு பெற்றால் அன்று நான் இறந்திருப்பேன்" என கூறினார். இந்த வயதிலும் கமல்ஹாசன் நடிப்பின் மீது எவ்வளவு பற்றோடு இருக்கிறார் என இந்த நிகழ்வு எடுத்து காட்டுகிறது.
THE NAME
— Turmeric Media (@turmericmediaTM) May 22, 2025
THE GAME
THE THUG
ThuglifeTrailer
➡https://t.co/JzUriwmtfd#ThuglifeAudioLaunch from May 24#Thuglife #ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers… pic.twitter.com/qDpkUxHiYw