வைகோ வீட்டில் மரணம்.. அடுத்தடுத்து விழுந்த பேரிடி..!

வைகோவின் 2வது சகோதரியான சரோஜா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இதையடுத்து வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
வைகோவிற்கு 3 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். வைகோவின் சகோதரர் பெயர் ரவிச்சந்திரன். வைகோவின் 2வது சகோதரி சரோஜா தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். சரோஜாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் இந்த முறை திமுக சார்பில் போட்டியிட வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். சீட் வழங்கப்படாவிட்டாலும் திமுக கூட்டணியில் தொடர்வோம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்திருந்தார். சீட் வழங்காதது, சகோதரி மரணம் என அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் வைகோ மனமுடைந்துள்ளார்