அகவிலைப்படி உயர்வு..! ஒருவருக்கு எவ்வளவு உயர்வு வரும் தெரியுமா ?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காகக் காத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு தீபாவளி பரிசாக வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 42 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இது 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி மாதம் 18,000 ரூபாய் சம்பளம் பெறும் ஒருவருக்கு 7,560 ரூபாய் அகவிலைப்படியாக வழங்கப்பட்டு வந்தது. இது 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்ட நிலையில் 8,640 ரூபாயாக அகவிலைப்படி உயரும்.இந்த உயர்வு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் ராகூர் கூறியுள்ளார்.