ஆதாரில் இலவச திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிப்பு..!
ஆதார் கார்டில் இலவசமாக திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கால அவகாசத்திற்குள் ஆதாரில் உள்ள முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை இலவசமாக செய்துகொள்ள முடியும். அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என ஆதார் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனப்படி, ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டை திருத்தம் செய்ய ரூ.25 வசூலிக்கப்படும், ஆப் லைனில் திருத்தம் செய்ய ரூ.50 வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது