‘யக்ஷா’ 2-ஆம் நாள் விழா! இந்துஸ்தானி இசையால் அரங்கை பரவசப்படுத்திய ராகுல் தேஷ்பாண்டே!

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்ஷா கலைத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி (24/02/2025) நடைபெற்றது. இதில் தேசிய விருதுபெற்ற இசைக்கலைஞர் ராகுல் தேஷ்பாண்டே அவர்கள் வழங்கிய இந்துஸ்தானி இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்திய.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பிரபல இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் தாயார் லட்சுமி ரவீந்தர் மற்றும் ஈவண்ட் ஆர்ட் நிறுவனத்தை சேர்ந்த சரஸ்வதி கிருஷ்ணகுமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.