படிக்காமல் படம் பார்த்த மகள்… தந்தை திட்டியதால் எடுத்த விபரீத முடிவு!

ஆன்லைன் வகுப்பில் இருந்த மகள் செல்போனில் படிக்காமல் படம் பார்த்ததாக தந்தை திட்டியதால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த ஹேமமாலினி என்ற மாணவி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அவர் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் கற்றுவந்தார். இந்நிலையில் அவர் செல்போனில் படிக்காமல் படம் பார்த்து வந்துள்ளார். இதனால் அவரது தந்தை அவரை திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி பெற்றோர் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார்.வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஹேமமாலினியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்த பெற்றோர் மகள் தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் மாணவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வது அரங்கேறி வருகிறது. அதனால் பெற்றோர் கவனமுடன் தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டியது அவசியமாகிறது.
newstm.in