தேதி மாற்றம்..!!! புஷ்பா 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. டிசம்பர் 6-ம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது. ஆனால் தற்பொழுது திரைப்படம் கூறப்பட்ட தேதியில் இருந்து 1 நாள் முன்னரே அதாவது டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் புஷ்பா 2 திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம் 1000 கோடி ரூபாயை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
#Pushpa2TheRuleOnDec5th pic.twitter.com/SZMNKWJKMJ
— Allu Arjun (@alluarjun) October 24, 2024