1. Home
  2. தமிழ்நாடு

ஜூலை 1-ஆம் தேதி தரிசனத்திற்கு அனுமதி இல்லை.!

1

கோவை ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் ஆதியோகி வளாகங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகளை முன்னிட்டு வரும் ஜூலை 1 ஆம் தேதி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக ஈஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை ஈஷா யோகா மையத்திற்கு தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகை தருகின்றனர்.

இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 1 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ஆதியோகி, தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி வளாகங்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இடையூறுகளுக்கு வருந்துகிறோம். மேலும் ஜூலை 2 ஆம் தேதி முதல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்" எனக் கூறப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like