1. Home
  2. தமிழ்நாடு

போலீசாரிடம் சிக்கிய காதல் மன்னன் "தர்ஷன்"..! பல மாணவிகளின் வீடியோ எடுத்து மிரட்டி...

1

கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருபவர் தர்ஷன். சில தினங்களுக்கு முன் 2 மாணவிகள் குனியமுத்தூர் போலீசில் புகார் தந்தனர்..அந்த புகாரை கேட்ட போலீசார் அதிர்ந்து போயினர்.

நாகர்கோவிலை சேர்ந்த ஸ்ரீ தர்ஷன் என்பவர் குனியமுத்தூர் பிரபல தனியார் கல்லூரியில்  எம்.ஏ இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வருகிறார்.

தன்னுடைய காலேஜில் படிக்கும் சக மாணவியிடம் காதலிப்பதாக கூறி தன வலையில் விழா வைப்பார். அதாவது சக மாணவியுடன் நட்பாக பழகி பிறகு காதலிப்பதாக சொல்லி, அந்த மாணவியை தான் தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி அழைத்து சென்றிருக்கிறார்.. அங்கே மாணவியுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அதாவது, அந்தக் கல்லூரியில் தன்னுடன் படித்த 21 வயதான மாணவியை காதலித்துள்ளார். மேலும், ஸ்ரீதர்ஷன் அந்த மாணவிக்கு தெரியாமல் அதே கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்த மற்றொரு மாணவியையும் காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில், ஸ்ரீ தர்ஷன் இரு மாணவிகளையும் பாலியல் ரீதியாக பயன்படுத்தி துன்புறுத்தல் செய்ததுடன் அவற்றை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். இது மட்டுமில்லாமல், அதே கல்லூரியில் படிக்கும் மூன்றாவது மாணவி ஒருவரையும் ஸ்ரீ தர்ஷன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

அந்த பெண்ணையும் வீட்டுக்கு வரும்படி அழைத்து வற்புறுத்தினாராம்.. ஆனால், அந்த பெண்ணோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.. யாருமில்லாத வீட்டிற்கு, தனியாக வரமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம். இருந்தாலும், விடாமல் அந்த பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து கொண்டே இருந்தாராம்.இதற்கு நடுவில், ஏற்கனவே காதலித்த 2 மாணவிகளுக்கு, தர்ஷனின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இதற்கு மேலும் தர்ஷனால் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக, அவரிடமிருந்து உறவை முற்றிலும் துண்டித்து கொண்டதாக தெரிகிறது. இதையறிந்த தர்ஷனோ, அந்த பெண்களையே மறுபடியும் பாலியல் உறவுக்கு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்கள் மறுத்ததற்கு, பகிரங்கமாகவே எல்லார் முன்னிலையும் ஆபாசமான வார்த்தைகளில் கேவலமாக பேசினாராம்.

அவர்களை மிரட்டியதுடன் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுளார்.

இதனையடுத்து 21 வயதான கோவையை சேர்ந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் , ஸ்ரீ தர்ஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே போல அதே கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியும் மாணவர் தர்ஷன் மீது புகார் அளித்துள்ளார்.

இரு மாணவிகளும் கொடுத்த புகாரின் பேரில் மாணவர் ஸ்ரீ தர்ஷன் மீது இரு தனித்தனி வழக்குகளாக 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த குனியமுத்தூர் காவல்நிலைய போலீசார் மாணவர் ஸ்ரீ தர்ஷனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிறகு தர்ஷன் தங்கியிருந்த அந்த வாடகை வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.. அப்போது வீட்டிற்குள் ஏராளமான ஆணுறை பாக்கெட்டுகள் கிடந்ததாம்.. புகார் தந்த 2 பெண்கள் மட்டுமல்லாமல், இதற்கு முன்பு 20க்கும் மேற்பட்ட மாணவிகளை இப்படி வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்கிறார்கள். இதன்பிறகு, தர்ஷனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.. அப்போது, மாணவிகளின் போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவை அதில் வைத்திருந்ததும் தெரியவந்தது.. ஆனால், இவைகளையெல்லாம், தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இதுவரைக்கும் ஒரேயொரு ஒரு ஆண் நண்பரைகூட, தன்னுடைய வீட்டுக்கு தர்ஷன் அழைத்து வந்ததில்லையாம்.. வெறும் பெண்கள் மட்டுமே இதுவரை வந்து சென்றிருக்கிறார்களாம்.அப்படி பெண்ணை வீட்டுக்கு அழைத்து வரும்போது, வீட்டின் அக்கம்பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா? இல்லையா? என்பதையெல்லாம் கண்காணிப்பாராம்.. வீட்டின் அருகே யாருமில்லை என்று உறுதியான பிறகே, அந்த பெண்ணுக்கு போன் செய்து, வீட்டிற்கு வரவழைத்து உல்லாசத்தில் ஈடுபடுவாராம்.

Trending News

Latest News

You May Like