1. Home
  2. தமிழ்நாடு

69 வது மடியில் இருந்து விழுந்து உயிரிழந்த DARE DEVIL..!

1

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி, 30 வயதான இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் வானளாவிய உயர கட்டிடங்களின் உச்சிக்கு ஏறி, அதில் அபாயகரமான இடங்களில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார்.

இன்ஸ்டாகிரம் சமூக வலைதளத்தில் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த வாரம், இவர் ஹாங்காங் மத்திய பகுதியில் உள்ள ட்ரெகன்டர் சாலைக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள ட்ரெகன்டர் டவர் எனும் ஒரு மிக உயரமான கட்டிடத்தில் இருந்து படம் பிடிக்கும் நோக்கில், காவலாளியிடம் நண்பனை பார்க்க உள்ளே செல்வதாக பொய் சொல்லிவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் லிஃப்டில் ஏறி 49-வது மாடிக்கு சென்றார், பின்னர் அங்கிருந்து மொட்டை மாடிக்கான கதவின் பூட்டை அவர் உடைத்து கொண்டு மேல் மாடி வரை சென்றார். அங்கு சில ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். 

ஆனால் எதிர்பாராத விதமாக மேலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது என்று சீன செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like