வேலை கிடைத்த மகிழ்ச்சியில் சாலையில் நடனம்.. உலகளவில் இளம்பெண் வீடியோ வைரல் !

அலுவலகத்திற்கு இன்டர்வியூவுக்கு சென்ற இளம்பெண் ஒருவருக்கு வேலை உறுதியானது. பின்னர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த இளம்பெண் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வேலை கிடைத்ததும் அலுவலக கட்டிடத்திற்கு வெளியே நடந்து சென்ற இளம்பெண் மகிழ்ச்சியுடன் நடனமாடியுள்ளார். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவை இளம்பெண்ணின் முதலாளி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இன்ஸ்டாகிராம் பயனர் ஏகே டகாரா_ஸ்பென்ஸ் இந்த வீடியோ கிளிப்பை பகிர்ந்து அதில் எனவேதான் நான் இந்த இளம் பெண்ணை வேலைக்கு அமர்த்தினேன், இதுதான் அவளுடைய மகிழ்ச்சியான பதில் என்று அவர் எழுதியுள்ளார்.
தற்போது அந்த வீடியோ உலகளவில் ட்ரெண்டானது. ஒருவரின் மனஉற்சாகம் வெளிப்படுத்தும் உண்மையான முகம் என பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்ததுடன்,பல்லாயிரம் கருத்துகளையும் சேகரித்துள்ளது.
இதுபற்றி பேசிய நடனமாடிய அந்த பெண் நான் மகிழ்ச்சியில் அதை செய்தேன். யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் நான் கருதியது தவறு. நன்றி என்று கூறினார்.
newstm.in