அடம்பிடித்த பேரன்….. காரில் அழைத்துச் சென்ற தாத்தா ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த். இவர் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு 73 வயதிலும் பிஸியான நடிகராக வலம் வரும் ரஜினி இன்று தனது பேரனை பள்ளிக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
இது குறித்து ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இன்று காலை என் மகன் பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை. அதனால் சூப்பர் ஹீரோவான தாத்தா எனது மகனை ஸ்கூலுக்கு அழைத்துச் சென்றார். நீங்கள் நடிப்பதிலும் சிறந்தவர் நிஜத்திலும் சிறந்தவர்” என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.