1. Home
  2. தமிழ்நாடு

தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது..?

Q

புத்த மதத்தலைவர் தலாய் லாமா, சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து ஹிமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறார். 90 வயதான தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என திபெத் தொடர்பான இந்திய பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு 80 எம்.பி.,க்கள் ஆதரவாக கையெழுத்திட்டு உள்ளனர்.

திபெத் தொடர்பான அனைத்துக் கட்சி இந்திய பார்லிமென்ட் மன்றம், திபெத் அரசின் பிரதிநிதிகளை பலமுறை சந்தித்துள்ளது. இந்த குழுவின் ஒருகிணைப்பாளராக உள்ள பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., சுஜீத் குமார் கூறியதாவது: ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி 80 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.

100 எம்.பி.க்களின் கையொப்பங்களைச் சேகரித்து முடிந்தவுடன் சமர்ப்பிக்கப்படும். இந்த குறிப்பாணையில் கையொப்பமிட்டவர்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் அடங்குவர். தலாய் லாமாவின் புதிய வாரிசை நியமிப்பதில் சீனாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மன்றம் உறுதியாக நம்புகிறது. திபெத் தொடர்பான பிரச்னைகளை எழுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like