யாகவராயினும் நா காக்க பட நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது..!
1976-லிருந்து மிதுன் சக்ரவர்த்தி பாலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். நடிகராக அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே மிதுன் சக்ரவர்த்தி தேசிய விருதை பெற்றார். தமிழிலும் 'யாகவாராயிணும் நா காக்க' என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். 48 வருடங்களாக பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் மிதும் சக்ரவர்த்தியின் சினிமா மீதான அர்பணிப்பை பாராட்டி இந்த உயரிய விருதை அறிவித்திருக்கிறார்கள்.
2022-ம் ஆண்டிற்கான இந்த 'தாதா சாகேப் பால்கே' விருது பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது விழாவில் இவர் இந்த விருதை பெற்றுக் கொள்ளவிருக்கிறார்.
இந்த விருதை தமிழ் சினிமாவிலிருந்து சிவாஜி கணேசன், பாலசந்தர், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பெற்றிருக்கின்றனர்.