4 குழந்தைக்கு அப்பா...ஆனால், அவர் செய்த தப்பான காரியத்தால் குடும்பமே சங்கடத்தில்!

4 குழந்தைக்கு அப்பா...ஆனால், அவர் செய்த தப்பான காரியத்தால் குடும்பமே சங்கடத்தில்!

4 குழந்தைக்கு அப்பா...ஆனால், அவர் செய்த தப்பான காரியத்தால் குடும்பமே சங்கடத்தில்!
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டி மரத்தை அடுத்த முண்ணூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை வயது (43) கூலி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என நான்கு குழந்தைகள் உள்ளது.இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பிச்சை பிள்ளை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அலறித்துடித்த சிறுமியின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிச்சைபிள்ளையை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story
Share it