சென்னையில் சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு..!
நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்றைய தினம் ரூ 38 உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ 1855 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 6 ஆவது மாதமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 14 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டர் விலை ரூ 818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலை உள்ளிட்ட விஷயங்களில் மாற்றம் ஏற்பட போகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.