பாதி விலைக்கு சிலிண்டர்...அரசு சூப்பர் அறிவிப்பு!

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்ததால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் பரிசு கிடைத்துள்ளது. இந்நிலையில் சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ. 200 குறைத்ததை அடுத்து கோவா மாநில அரசு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோவா மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டை வைத்திருப்பவர்களுக்கு 428 ரூபாய்க்கு சிலிண்டர் கிடைக்கும். இந்த அறிவிப்பால் அம்மாநில சிலிண்டர் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோவா முதல்வர் கூறுகையில், 'எல்பிஜி சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என பிரதமர் மோடி முன்னதாக அறிவித்தார். உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ. 200 மத்திய மானியம் வழங்கப்படுகிறது. இது தவிர, AAY ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 275 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்’ என்றார்.
கோவா மாநிலத்தில் 11,000க்கும் மேற்பட்டவர்கள் AAY (அந்தியோதயா) அட்டைகளை வைத்துள்ளனர். அத்தகைய அட்டை வைத்திருப்பவர்கள், எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 உஜ்வாலா யோஜனா மானியத்தையும், கோவா அரசால் வழங்கப்படும் ரூ.275 மானியத்தையும் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.475 மானியம் வழங்கப்படும். அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ஏழைக் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டதை அடுத்து, பனாஜியில் 14.2 கிலோ சிலிண்டர் ரூ.903 ஆக மாறியுள்ளது. அதேசமயம், தெற்கு கோவாவில் சிலிண்டரின் விலை ரூ.917. இப்படி ரூ.903 கணக்கிட்டு பார்த்தால் ரூ.200 உஜ்வாலா யோஜனா மற்றும் ரூ.275 அரசு மானியம் கிடைத்தவுடன் சிலிண்டர் விலை ரூ.428 ஆக குறையும்.