1. Home
  2. தமிழ்நாடு

இன்று வங்கக்கடலில் உருவாகும் 'ரீமால்' புயல்! எங்கு எப்போது கரையை கடக்கும்?

1

வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிவிட்டது.இது தீவிர புயலாக மாறும். இந்த தீவிர புயலுக்கு REMAL (ரெமல்) என பெயரிடப்பட்டுள்ளது. இது வரும் 26ஆம் தேதி வங்கதேசத்தை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இதனால் வரும் 26 ஆம் தேதி வரை மீனவர்கள் சம்பந்தப்பட்ட கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அது போல் மக்களும் நீர் வீழ்ச்சி, மலை பிரதேசங்கள் கொண்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழையும், இன்று தேதி முதல் 28-ஆம் தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று(வெள்ளிக்கிழமை) காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும்.

 இதனால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 26 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு மே 31 ஆம் தேதி முன் கூட்டியே தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like