கொடைக்கானலில் மீண்டும் அனுமதி ! சுற்றுலா பயணிகள் உற்சாகம் !

கொடைக்கானலில் கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் சவாரி இன்று முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
கொடைக்கானலின் அழகை கண்டு ரசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருடம்தோறும் வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி, படகு சவாரி செய்யவது வழக்கம்.
கொடைக்கானலின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியினை சுற்றி ஐந்து கிலோ மீட்டர் நடைபாதையுடன் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பலர் சைக்கிள் சவாரி செய்வது வழக்கம். மேலும், பலர் சைக்கிள் சவாரி செய்து கொடைக்கானல் அழகை கண்டு ரசிப்பதும் உண்டு.
இதனிடையே, கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருந்து. பின்னர் அந்த தடை சில தளர்வுகளுடன் நீக்கப்பட்டது.
இந்த நிலையில், கொடைக்கானலில் நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை பின்பற்றி சைக்கிள் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சைக்கிள் சுற்றுலாப் பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.