சைபர் கிரைம் எச்சரிக்கை..! தமிழகத்தில் ஜிபே லிங்க் அனுப்பி ஆன்லைனில் மோசடி..!
தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகளும் கிடைக்கிறது. அதே போல தீமைகளும் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் புது புது டெக்னீக் கண்டுபிடித்து ஆன்லைன் மூலம் மோசடி நடந்த வண்ணம் இருக்கிறது. தற்போது புதுவிதமாக ஜிபே மூலம் லிங்க் அனுப்பி வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் கும்பல் அதிகரித்து இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இவர்கள் தங்களை ராணுவ வீரர் என அறிமுகப்படுத்தி கொண்டு தொழிலுக்கு ஏற்றார்போல பேசி ஜிபேயில் மோசடி செய்வதாக சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னையில் உள்ள அழகு கலை நிபுணர் ஒருவரிடம் இது போல மோசடி நடந்து இருப்பதாக புகார் வந்துள்ளது. தவறாக உங்களுடைய அக்கவுண்டிற்கு பணம் அனுப்பப்படும். அதை திருப்பி தர ஜிபே மூலம் லிங்க் அனுப்பி வைக்கப்படும். அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய பணம் எல்லாம் காலியாகிவிடும். அதனால் போலீசார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கின்றனர்.