சைபர் கிரைம் அறிவுரை..! பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க...
• உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்கவும்.
• தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வதை, தேவையில்லாத செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும்.
• எந்த சூழ்நிலையிலும் முக்கிய UPI தரவுகளை அல்லது OTP-ஐ பகிர்வதை தவிர்க்கவும்.
• நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
• எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் மற்றும் தெரியாத அல்லது உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும்.
நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.