1. Home
  2. தமிழ்நாடு

வெளியான சி வோட்டர் கருத்துக்கணிப்பு : 2026-ல் தமிழக முதல்வர் யார்?

1

அடுத்த வருடம், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, அரசியல் கட்சித்தலைவர்கள் இப்போதே அதற்கான ஆயத்தப்பணிகளில் இறங்கி விட்டனர். அரசியல் தீர்மானங்கள், கொள்கை முடிவுகள், கழக பொறுப்புகள் என அனைத்தையும் சமீபத்தில் அறிவித்த தமிழக வெற்றிக்கழகம் கட்சியால், அடுத்த வருடம் சில அரசியல் மாற்றங்களும் நிகழலாம் எனக்கூறப்படுகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட சி-வோட்டர் கணக்கெடுப்பின் படி,மக்கள் அதிகம் தேர்ந்தெடுத்த முதல்வராக இருப்பது, மு.க.ஸ்டாலின்தான். இந்த கணக்கெடுப்பில், 27 சதவீதம் பேர் அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். இவருக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர், தவெக தலைவர் விஜய். இவர் முதலமைச்சராக வேண்டும் என 18 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.

அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என 10 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதே போல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சராக வர வேண்டும் என 9 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.

முதல் இடத்தில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினையும், இரண்டாம் இடத்தில் விஜய்யைும் வைத்துள்ளனர் மக்கள். எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் 3 மற்றும் 4ஆம் இடங்களை பிடித்திருக்கின்றனர்.

இப்படி வந்துள்ள சி-வோட்டர் முடிவுகள் மு.க. ஸ்டாலினுக்கு சாதகமாக வந்துள்ளது. இருப்பினும் விஜய்யின் இந்த அரசியல் வருகையால் வரும் தேர்தல் களத்தில் கண்டிப்பாக பலவித மாற்றங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது. காரணம், ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில், விஜய்யை மக்கள் நிறுத்தி வைத்துள்ளனர். 

இந்த சி-வோட்டர் கணக்கெடுப்பானது, தற்போதைய திமுக அரசாங்கத்தின் ஆட்சி மக்களை திருப்தி படுத்தியதா இல்லையா என்பதையும் வெளிகொண்டு வந்துள்ளது. இதில் கலந்து கொண்டவர்கள்ல் 15  சதவீதம் பேர் தாங்கள் இந்த ஆட்சிய்ல் மிகவும் திருப்தியடைந்ததாக தெரிவித்து உள்ளனர். 36 சதவீதம் பேர், ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளதாகவும், 25 சதவீதம் பேர் திருப்தி படவில்லை என்றும், 24 சதவீதம் பேர் முடிவெடுக்க தெரியவில்லை என்றும் பதிலளித்துள்ளனர். 

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக எப்படி ஆட்சி புரிந்தார் எனும் முடிவுகளும் இந்த கருத்துகணிப்பில் வெளிவந்துள்ளது. இதில், 22 சதவீதம் பேர் முழு திருப்தி அடைந்திருப்பதாகவும், 33 சதவீதம் பேர் ஓரளவிற்கு திருப்தி அடைந்திருப்பதாகவும், 22 சதவீதம் பேர் திருப்தியில்லை என்றும், 23 சதவீதம் பேர் முடிவெடுக முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

ஆக மொத்தம், இந்த கணக்கெடுப்பின் படி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் தமிழக அரசியல் களத்தில் பெருந்தலைவராக விளங்குவதாக தெரியவந்துள்ளது. ஆனால், 2026 தேர்தலுக்குள் இந்த நிலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று சிலர் கூறி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like