க்யூட் காம்போ! லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் யூடியூப் சூப்பர் ஸ்டார்!!
க்யூட் காம்போ! லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் யூடியூப் சூப்பர் ஸ்டார்!!

நயன்தாராவின் ஆக்சிஜன் படத்தில் யூடியூப் பிரபலமான ரித்விக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்த புதுமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ஆக்சிஜன் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ஆக்சிஜன் படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
அந்த படத்தில் யூடியூப் பிரபலமாக ரித்விக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் வந்த பேரு வச்சாலும் பாடலுக்கு ஆண், பெண் வேடமிட்டு ரித்விக் டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி வைரலானது.ஆண், பெண் என்று மட்டும் இல்லாமல் வயதான கெட்டப்புகளிலும் வந்து அசத்துவார் அந்த குட்டிப் பையன்.
இந்நிலையில் அவர் ஆக்சிஜன் படத்தில் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்கும் ஆவல் அதிகரித்திருக்கிறது. நயன்தாரா படத்தில் வரும் குழந்தை நட்சத்திரங்கள் கண்டமேனிக்கு பிரபமலாகிவிடுவார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே பிரபலமான ரித்விக் இந்த படம் மூலம் மேலும் பிரபலமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in