வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! மீண்டும் கிராம் 8000 ரூபாயைத் தாண்டியது..!

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,010 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 64,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
பிப்.11-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,480 ஆகவும், பிப்.20-ம் தேதி ரூ.64,560 ஆகவும் உயர்ந்தது. இதன் பிறகு, சற்று விலை குறைந்தாலும், பிப்.25-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை பதவு செய்து வந்தது. இதற்கிடையில் பிப்.26 தொடங்கி மூன்று நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1000 வரை குறைந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 3) சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,010 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.560 உயர்ந்து, பவுன் ரூ.64,080 ஆகவும் உள்ளது.
இதனிடையே, 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,07,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!
04/மார்ச்/2025 - ரூ. 64,080
03/மார்ச்/2025 - ரூ. 63,520
02/மார்ச்/2025 - ரூ. 63,520
01/மார்ச்/2025 - ரூ. 63,520
28/பிப்ரவரி/2025 - ரூ. 63,680
27/பிப்ரவரி/2025 - ரூ. 64,080
26/பிப்ரவரி/2025 - ரூ. 64,400
25/பிப்ரவரி/2025 - ரூ. 64,600
24/பிப்ரவரி/2025 - ரூ. 64,440
23/பிப்ரவரி/2025 - ரூ. 64,360