1. Home
  2. தமிழ்நாடு

வாடிக்கையாளர்கள் ஷாக்..! விரைவில் ரீசார்ஜ் கட்டணம் உயரப்போகுது..!

1

இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. எனவே தொலைத்தொடர்பு துறையில் BSNL, VI, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சிறந்த சேவையை வழங்கி வருகிறது. இதில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.முன்னணி நிறுவனங்கள் தங்களது சேவையை 4G யில் இருந்து 5G க்கு மாற்றுவதில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு 25 சதவீத ரீசார்ஜ் கட்டணம் உயரலாம் என ஆக்சிஸ் கேபிட்டலின் அறிக்கை தெரிவித்துள்ளது.இந்த விலை ஏற்றத்தின் மூலம் நகரங்களில் உள்ளவர்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகளுக்காக செலவிடப்படும் தொகை, கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு 3.2 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு 5.2 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறுகிறது.

25 சதவீத கட்டண உயர்வை, டெலிகாம் சேவை நிறுவனங்கள் அமல்படுத்தினால் ARPU என்று சொல்லப்படுகிற ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் சராசரி வருமானத்தின் அளவு 16 சதவீதம் உயரும். மேலும், ஏர்டெல் ஒரு வாடிக்கையாளருக்கு ரூ. 29 ரூபாயும் மற்றும் ஜியோவிற்கு ரூ. 26 ரூபாயும் வருமானமாகக் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆக்சிஸ் கேப்பிடல் மதிப்பிட்டுள்ளது.4G/5G பேக்குகளின் விலை அதிகரிக்கும் என்றும், சில குறைந்த மதிப்புள்ள பேக்குகளை படிப்படியாக நீக்கப்படக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like