வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! விரைவில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை நிறுத்தம் ?
பிப்ரவரி 29 முதல் பேடிஎம்-இல் அனைத்து சேவைகளையும் நிறுத்துவதாக RBI தரப்பில் தெரிவித்துள்ளது. குறிப்பாக மார்ச் 2024 இல் RBI புதிய வாடிக்கையாளர்களை உள்வாங்குவதை உடனடியாக நிறுத்துமாறு PPBL க்கு உத்தரவிட்டது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட யுபிஐ சேவை செயலிகளில் ஒன்று பேடிஎம். இதன் சேவையை 8.9 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் 29 சதவீதத்தை இந்த நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதே நேரம் இந்த நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கையில், ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு அப்பாற்பட்டு நடந்துகொண்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, பேடிஎம் நிறுவனத்தின் வங்கி சேவைக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது.
இந்த தடையானது வரும் பிப்ரவரி 29ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் புதிதாக வைப்புநிதி பெறவோ, கடன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவோ, வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வரவு செய்யவோ கூடாது என்றும், முன்கூட்டிய பிரீபெய்ட் வசதிகள், வாலெட்கள், பாஸ்டேக், போக்குவரத்து அட்டை உள்ளிட்ட சேவைகளை வழங்கவும் பேடிஎம்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளில் வைத்துள்ள தங்கள் பணத்தை இருப்பு உள்ள வரை திரும்ப பெற்றுக்கொள்ள இயலும் எனவும் ஆர்பிஐ தெளிவுப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 11 முதல் பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது