1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..! புதிதாக இணையும் பயனர்களுக்கு இனி கட்டணம் வசூல்..!

1

உலக அளவில் மிகப் பிரபலமான எலான் மஸ்க்கின் நிறுவனமான எக்ஸ் தளம் இன்று அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு சமூக வலைதளமாகவும் மாறியுள்ளது.

பல நல்ல தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், நாட்டு நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், டிரெண்டிங் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் எக்ஸ் தளம்தான் கை கொடுக்கிறது. 

எலான் மஸ்க் வசம் எக்ஸ் தளம் வந்தது முதல் ஏகப்பட்ட மாற்றங்கள். லோகோவை மாற்றம், நிறுவனத்தின் பெயரை மாற்றம், ப்ளூ டிக் விற்பனை என ஏகப்பட்ட மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது.

இந்த நிலையில் புதிய மாற்றம் ஒன்றை எக்ஸ் தளம் கொண்டு வரவுள்ளது. அது என்னவென்றால் புதிதாக எக்ஸ் கணக்கை ஆரம்பிப்போர் இனிமேல் பதிவுகள் போட அதாவது டிவீட் செய்ய காசு தர வேண்டும் என்பதே அது. இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில் துரதிர்ஷ்டவசமாக பாட்களின் தொல்லை எக்ஸ் தளத்தில் அதிகரித்து விட்டது. இதை கட்டுக்குள் கொண்டு வர ஒரே வழி டிவீட் போடுவதற்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிப்பதுதான் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட, மற்றவர்களின் பதிவுகளுக்குப் பதிலளிக்க. லைக் மற்றும் புக்மார்க் செய்ய கட்டணம் வசூலிக்கவுள்ளதாக எலான் மஸ்க் தகவல்

மேலும் அவர் கூறுகையில் பலர் போலி கணக்குகளை வைத்துக் கொண்டு, உண்மையானவர்களின் கணக்குகளுக்கு இடையூராக இருக்கிறார்கள். இதனால் உண்மையானவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதையும் நாம் இந்த கட்டண அறிமுகத்தால் சரி செய்ய முடியும் என்று கூறியுள்ளார் மஸ்க்.

இந்த கட்டணமானது புதியவர்களுக்குத்தான். அதுவும் கூட 3 மாதங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுமாம். அதன் பின்னர் அவர்கள் இலவசமாக பதிவிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மஸ்க் விளக்கியுள்ளார்.

இந்தத் திட்டமானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நியூசிலாந்து, பிலிப்பைன்ஸில் அமலுக்கு வந்து விட்டது. புதிய வெரிபைட் செய்யப்படாத பயன்பாட்டாளர்கள் வருடத்திற்கு 1 டாலர் கட்டணம் செலுத்தி எக்ஸ் தளத்தைப் பயன்படுத்தும் திட்டம் அங்கு அமலில் உள்ளது. தற்போது இதைத்தான் அத்தனை நாடுகளுக்கும் வருகிறதாம் .

எக்ஸ் தளத்தில் பாட்கள், போலி கணக்குகள், ஸ்பாம் கணக்குகள் என ஏகப்பட்ட குப்பைகள் உள்ளன. இதை சரி செய்யும் பணியையும் தற்போது எக்ஸ் தளம் முடுக்கி விட்டுள்ளது. சமீபத்தில் பல பாட் கணக்குகளை எக்ஸ் தளம் நீக்கியது. இதனால் பலருக்கும் பாலோயர்கள் அதிரடியாக குறைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Trending News

Latest News

You May Like