1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாவட்டத்தில் 6 நாட்கள் ஊரடங்கு பிறப்பிப்பு..!

Q

தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் 21ம் தேதி காலை வரை நான்கு நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு அறிவிப்பின் படி 4 பேருக்கு மேல் நின்று கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பூலித்தேவனின் 309 வது பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிகழ்ச்சிகளுக்காக மொத்தமாக ஆறு நாட்கள் தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட இருக்கிறது.

Trending News

Latest News

You May Like