தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு: கலெக்டர் தகவல்..!
தென்காசி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூலித்தேவன் பிறந்தநாள்,ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியையொட்டி தென்காசி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணி முதல் வரும் 21-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வரும் 30-ம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அறிவிப்பின்படி 4 பேருக்கு மேல் நின்று கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.