ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு !! முதலமைச்சர் அறிவிப்பு

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 31-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 19,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 5,48,318 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,64,626 ஆக உள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மணிப்பூரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Newstm.in