நாளை முதல் , ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு !! அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. சில தொழில்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
திருமலை திருப்பதியில் வேலை செய்யும் தேவஸ்தான ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு சத்தான உணவு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் காணமாக கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் கோவில் மூடப்பட்டது.
ஜூன் 10ஆம் தேதி முதல் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சத்தையும் மீறி இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழு மலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு திருப்பதியில் நாளை முதல் , ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Newstm.in