1. Home
  2. தமிழ்நாடு

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? - முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை !

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? - முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை !

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் ஒவ்வொரு மாதமும் மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனையின் அடிப்படையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க, அதேசமயம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் வழங்கி வருகிறது.

அந்தவகையில், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? - முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை !

காணொலி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன.

ஏற்கனவே நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வரும் நிலையில் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? - முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை !

இந்நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவதால் மீண்டும் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like