1. Home
  2. தமிழ்நாடு

கடலூர் ரயில் விபத்து : கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளில் வழக்கு..!

1

தமிழகத்தில் நேற்று காலை கடலூர் அருகே பள்ளி வேன் ரயில்வே கேட் கடக்கும் போது சிதம்பரம் நோக்கி சென்ற ரெயில் மோதியது. இந்த சம்பவத்தில் 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் உயிரிழந்தனர்.பள்ளி வேன் டிரைவரும், மற்றொரு மாணவனும் படுகாயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து தமிழகத்தையே உலுக்கியது. மேலும் இறந்த 3 குழந்தைகளில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் என்ற துயர செய்தியும் மக்களை உலுக்கி எடுத்தது . 

இந்நிலையில் ரயில் விபத்தின் போது ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியின்போது தூங்கியதே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வெ கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை ரெயில்வே சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பாக பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே சட்டப்பிரிவுகளின்கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பப்ட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like