பஞ்சாபின் பிளே ஃஆப் கனவுக்கு ஆப்பு வைத்த சி.எஸ்.கே!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 153 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ராகுலும், மயங்க் அகர்வாலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்ல் இன்று சோபிக்கவில்லை. அவர் 12 ரன்கள் மட்டும் எடுத்தார். சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூபிளசிஸும் கெயிக்வார்டும் களம் இறங்கினர். டூபிளசிஸ் அதிரடியாக விளையாடி ஆரம்பம் முதலே ரன்களை குவித்து வந்தார்.48 ரன்களில் அவர் அவுட்டாக அடுத்து ராயுடு வந்தார்.
இளம் வீரர் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 18.5 பந்துகளில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. கெயிக்வார்ட் 62 ரன்களுடனும், ராயுடு 30 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் கனவு சிதைந்துவிட்டது.
newstm.in