1. Home
  2. தமிழ்நாடு

சிஎஸ்கே கேப்டன் மற்றும் லக்னோ அணி கேப்டனுக்கு அபராதம்..!

1

ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 19  33வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியை லக்னோ அணி தோற்கடித்தது. இந்நிலையில் சிஎஸ்கே அணி நடந்த 7 போட்டிகளில் 3 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

அதே போல லக்னோ அணி நிர்ணயித்த நேரத்தில் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி முதல் முறையாக இந்த தவறை செய்துள்ளது. எனவே முதல் தவறு என்பதால் கேப்டனுக்கு மட்டும் அபராதம் மிதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. அதே போல லக்னோவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை.

அதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கைக்வாட்’க்கு இப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து 12 லட்சம் அபராதம் தண்டனையாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணியும் இந்த சீசனில் இப்போட்டியில் தான் முதல் முறையாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. எனவே முதல் தவறு என்பதால் கேப்டன் ருதுராஜ்க்கு மட்டும் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய அடுத்தப் போட்டியில் இதே லக்னோ அணியை ஏப்ரல் 23ம் தேதி எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் லக்னோவை தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சென்னை எதிர்கொள்கிறது.

Trending News

Latest News

You May Like