பயிற்சியின் போது சிஎஸ்கே வீரருக்கு தலையில் பலத்த அடி..!
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே, வங்கதேசத்தில் வங்கதேச பிரிமியர் லீக் (பிபிஎல்) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அந்நாட்டு வீரர்கள் உட்பட பல வெளிநாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர். இதில் பந்துவீச்சாளர் முஸ்தபிசு ரஹ்மான் கமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.
இந்நிலையில், கமிலா விக்டோரியன்ஸ் அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது. அப்போது, மற்றொரு வீரரான லிட்டன் தாஸ் அடித்த பந்து எதிர்பாராத விதமாக முஸ்தஃபிஷர் ரஹ்மான் தலையின் இடதுபுறத்தில் பலமாக தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் முஸ்தபிசு ரஹ்மான் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அருகில் இருந்த சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் முஸ்தபிசுர் ரஹ்மானை உடனடியாக மீட்டனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அருகில் இருந்த மருத்துவமனையில் முஸ்தபிசு ரஹ்மான் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தையல் போடப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டு உள்ளார்.